« Home | மன்னார்க் கடலில் புலிகள் ஆதிக்கம் » | இலங்கை - இன்றைய நிலை-1 » | இலங்கை - இன்றைய நிலை. அறிமுகம் » | இந்தியா - புலிகள் » | நன்றி » | நடப்புகள் பற்றி »

கொழும்புத் தாக்குதலும் சம்பந்தப்பட்டவையும்.

சில நாட்களின்முன் கொழும்பில் சிறிலங்காப் படையினரின் உயர்மட்டத் தளபதியான மேஜர் ஜெனரல் பரமி குலதுங்க தற்கொலைத் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அனேகமாக அரசோ சர்வதேசமோ எதிர்பாத்திருக்க மாட்டார்கள். சர்வதேசத்தில் புலிகள் மிக இக்கட்டான நிலையில் நின்ற நேரம் அது. ஆனாலும் துணிந்து இப்படியொரு தற்கொலைத்தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள்.

புலிகளுக்கு பன்னாட்டளவில் அண்மையில் கிடைத்த பின்னடைவு, ஐரோப்பிய யூனியன் அவர்களைத் தடை செய்ததாகும். அதை இயன்றவரை தமக்குச் சாதகமாக்க அரசுத்தரப்பும், புலித்தரப்பும் முயல்கின்றனர் என்பது வேறு விசயம். ஆனால் அத்தடையுடன் புலிகளை ஒரு வழிக்குக் கொண்டுவரலாம் என்று அரசும் சர்வதேசமும் நினைத்திருந்தன. சிறிலங்கா அரசோ அத்தடைமூலம் மேலும் மனவலிமை பெற்றிருந்தது. இந்நிலையில் மூர்க்கத்தனமான சில நடவடிக்கைகளைச் செய்தது.
குறிப்பாக புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஆழ ஊடுருவி தாக்குதல்களைச் செய்தது. மக்களைத்தான் அதிகளவில் இத்தாக்குதல்கள் மூலம் கொன்றிருந்தாலும் புலிகளின் தளபதிகள் மீதும் தாக்குதலை நடத்தியிருந்தது. அதில் லெப்.கேணல் மகேந்தி உட்பட சிலர் கொல்லப்பட்டனர்.

அரசின் இறுமாப்பையும் போர் நோக்கிய முன்முனைவையும் கட்டுப்படுத்தவும் சில விசயங்களை அதற்குத் தெளிவிக்கவும் வேண்டிய தேவை புலிகளுக்கு வந்தது.
அரசின் முக்கிய பிரச்சினை கொழும்புப் பாதுகாப்பும் பொருளாதார வளர்ச்சியும்தான். அவை ஒழுங்காக இருக்கும் பட்சத்தில்தான் அரசை நிம்மதியாக நடத்த முடியும். புலிகளுக்கும் ரணிலுக்கும் ஒப்பந்தம் ஏற்பட்ட தொடக்கத்தில் கொழும்புக்கு இருந்த ஆபத்து முற்றாக விலகியிருந்தது. புலிகள் தாக்கமாட்டாகள் என்ற நம்பிக்கையில்தான் ரணில் கொழும்புக் கெடுபிடிக்ளை நீக்கினார். அதுவரைகாலமும் மூடப்பட்டிருந்த வீதிகள் திறக்கப்பட்டன. காவலரண்கள் அகற்றப்பட்டன. கொழும்பு வழமைக்குத் திரும்பியது.

ஆனால் ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து இருதரப்பிலும் சிறுசிறு தாக்குதல்கள் நடத்தப்படத் தொடங்க கொழும்புப் பாதுகாப்பும் இயல்பாகவே கேள்விக்குறியானது. கொழும்பு மீதும் பொருளாதாரத்தின் மீதும் தமது பிடியை வெளிப்படுத்த புலிகள் சில விசயங்களைச் செய்யவேண்டி வந்தது.
அரசு கொழும்புப் பாதுகாப்புக்கு பெருமளவு நம்பியிருப்பது சர்வதேசத்தையே. சர்வதேச அழுத்தங்களை மீறி புலிகள் கொழும்பைத் தாக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இன்றளவும் அது இயங்குகிறது. அந்த நம்பிக்கையில்தான் கொஞ்சம் அடாவடியாகப் புலிகளோடு நடந்துகொண்டது. ஆகவே சர்வதேசத்தால் கொழும்பைப் பாதுகாக்க் முடியாது என்தைப் புலிகள் உணர்த்த வேண்டிய தேவைக்குத் தள்ளப்பட்டார்கள். இந்நிலையில்தான் சரத் பொன்சேகா மீதான தாக்குதல் நடத்தப்பட்டது.
அதன்பிறகுதான் ஐரோப்பிய யூனியன் தடை வந்தது.
ஐரோப்பிய யூனியன் தடையுடன் புலிகள் அடங்கிவிடுவார்கள் என்றுதான் பலரும் நினைத்தனர். ஆனால் அதுதான் புலிகளுக்கு இன்னொரு தாககுதலை நடத்தவேண்டிய தேவையை அவசரமாக்கியது.

ஐரோப்பிய யூனியன் தடை தம்மைப் பாதித்ததாகவும் அதன்மூலம்
தம்மால் கொழும்புக்கும் பொருளாதாரத்துக்கும் இருந்த அச்சுறுத்தல் குறைந்ததாகவும் அரசு நினைக்கக்கூடாது என்பதில் புலிகள் தெளிவாக இருந்தனர். அதன்படி தமது பாணியில் ஒரு எச்சரிக்கையை விடுப்பதென்று தீர்மானித்தனர்.
முதலில் பொருளாதாரம் மீது ஒரு தாக்குதல் நடத்தவே திட்டமிருந்தனர் போலுள்ளது. வத்தளையில் இருவர் கைதுசெய்யப்பட்டதுடன் தற்காலிகமாக அதைத் தள்ளிப்போட்டுவிட்டனர்.
ஆனாலும் சிலதினங்களுள் உயர் இராணுவ அதிகாரி மீது தற்கொலைத் தாக்குதலை நடத்தி அதைச் சாதித்துக் கொண்டனர்.

இதன்மூலம் புலிகள் அரசுக்குச் சொன்னசெய்தி தெளிவானது.

"கொழும்பை யாராலும் பாதுகாக்க முடியாது, அது எம்மால் மட்டுமே முடியும்" என்ற செய்தியே அது.
அதைவிட மெலிதான வெறொரு செய்தியையும் சொல்லி ஒரே கல்லில் பலமாங்காய்கள் அடித்துக் கொண்டனர் புலிகள். தமது கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவி தங்களது தளபதிகளைக் கொல்வதை நிறுத்தும் வழியாகவும் புலிகள் இத்தாக்குதலைப் பயன்படுத்திக்கொண்டனர்.

இத்தாக்குதலின் பின் நடந்தவையும் எதிர்பார்க்காதவையே.
_________________________________________________________________


புலிகளின் ஏமாற்றம்

சரத் பொன்சேகா மீதான தாக்குதலின்பின் உடனடியாகவே அரசு கடுமையான எதிர்வினையைச் செய்தது. திருகோணமலையில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. அதில் 16 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதன்பின் நிறையத் தாக்குதல்களை அரசு வெளிப்படையாகச் செய்தது. நிறையத் தடவைகள் தொடர்ச்சியான எறிகணைத் தாக்குதலைச் செய்தனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. முழுமையான யுத்தம் நடைபெறுவது போலவே வடக்கு, கிழக்கில் அரசபடை தாக்குதலைச் செய்தது.
அதன்பின் கடலில் சண்டை நடந்தாலென்ன, வேறு எங்காவது நடந்தாலென்ன உடனடியாக வான்தாக்குதலையும் எறிகணைத் தாக்குதலையும் அரசபடை நடத்தியது. இறுதி நேரத்தில் கிளிநொச்சியில் புலிகளின் வான்தளம் என்று சொல்லப்பட்ட பகுதிமீது பல நாட்கள் தாக்குதல் நடத்தியது வான்படை. இவையனைத்தும் தம்மீது நடத்தப்பட்ட தாக்குலுக்கான மட்டுப்படுத்தப்பட்ட எதிர்த்தாக்குதல் என்ற பெயரால் அரசு நடத்தியவை.

இப்படியான மட்டுப்படுத்தப்பட்ட அரசதாக்குதல் எவற்றுக்குமே புலிகள் எதிர்த்தாக்குதல் நடத்தவில்லை. கண்காணிப்புக் குழுவினருக்கு தொடர்ச்சியான முறைப்பாடுகளைச் செய்துகொண்டிருந்தனர். ஒரு கட்டத்தில் அரசை எச்சரிக்கவும் தொடங்கியிருந்தனர். இறுதியாக சு.ப. தமிழ்ச்செல்வன் காட்டமான எச்சரிக்கையொன்றை வெளியிட்டார். இனிமேல் அரசதரப்பு இப்படியான தாக்குதல்களைச் செய்தால் கடுமையான எதிர்த்தாக்குதல் எம்மிடமிருந்து வரும் என்பதே அது. அவர் இவ்வெச்சரிக்கையை வெளியிட்ட மறுநாள்தான் வத்தளையில் தாக்குதல் ஆயத்தங்களோடு இருவர் பிடிபட்டனர்.
ஒரு பதிலடித்தாக்குதல் என்ற பெயரில் புலிகள் தாக்குதல் திட்டமொன்றை வைத்திருக்கக்கூடும்.

அது பிசகிவிட்டாலும் பரமி குலதுங்க மீதான தாக்குதல் சரியாக நடந்து முடிந்தது. ஆனால் தொடர்ந்து நடந்து புலிகளுக்கு ஏமாற்றமாகவே இருந்திருக்கும்.

அத்தாக்குதலைத் தொடர்ந்து அரசபடை வழமைபோல மட்டுப்படுத்தப்பட்ட தாக்குதலை புலிகளின் பகுதி மீது நடத்தும் என்ற எதிர்ப்பார்ப்பு இருந்தது. புலிகளும் அதையே எதிர்பாத்தனர். அத்தாக்குதல் நடந்ததும் அதைச் சாட்டாக வைத்து எதிர்த்தாக்குதல் ஒன்றுக்குப் புலிகள் தயாராக திட்டத்துடன் காத்திருந்திருப்பர். அது குறைந்தபட்சம் முக்கிய முகாம் மீதான செறிவான எறிகணைத் தாக்குதலாக இருந்திருக்கலாம். ஆனால் அரசு தாக்குதல் ஏதும் நடத்தாமல் அமைதியாக இருந்ததன் மூலம் புலிகளுக்கு ஏமாற்றத்தை அளித்தது, தன்னையும் பாதுகாத்துக் கொண்டது. சரியாகச் சொல்லப்போனால் புலிகள் தாக்குதல் நடத்த இருந்ததை அரசு உணர்ந்து கொண்டது.

புலிகள் அரசபடைமீது தாக்குதல் நடத்த ஒரு காரணத்தையும் சந்தர்ப்பத்தையும் பார்த்துக் கொண்டுள்ளார்கள் என்பது அரசுக்குப் புரிந்துவிட்டது. அதன்மூலம் முழுமையான யுத்தமொன்று தொடங்கும் ஏதுநிலையையும் அரசு உணர்ந்துள்ளது. இன்றைய நிலையில் யுத்தம் தொடங்குவதை அரசு எள்ளளவும் விரும்பவில்லை. (இதுபற்றி ஏற்கனவே ஒரு பதிவு எழுதியுள்ளேன்).

இந்நிலையில் அரசு பதில்தாக்குதல் நடத்தாமல் அமைதியாக இருந்தது புலிகளுக்கு ஏமாற்றமே.
_________________________________________________________________

புலிகளின் எதிர்வினை எப்படியிருக்கும்?

புலிகளின் செறிவான பீரங்கித் தாக்குதல் பற்றி எதிரிக்கு நன்கு தெரியும். கடந்த காலங்களில் மிகப்பெரிய பலனை அவர்கள் அடைந்துள்ளார்கள். தனியாக எறிகணைத் தாக்குதல் மூலமாகவே பலமான தாக்கத்தை அவர்கள் ஏற்படுத்தினார்கள். ஜெயசிக்குறு தொடங்க முன்பு வவுனியாவில் புலிகள் நடத்திய முதலாவது ஆட்லறித் தாக்குல் அவர்களுக்கு எதிர்பாத்ததைவிட அதிக பலனைக் கொடுத்தது.
அதன்பின் தள்ளாடி முகாம் மீது தனியே எறிகணைத் தாக்குதலை மட்டுமே நடத்தி ஆயுதக்களஞ்சியத்தை வெடிக்க வைத்தனர் புலிகள். அத்தாக்குதலில்தான் புலிகளிடம் பல்குழல் ஆட்லறிப்பீரங்கி பயன்பாட்டிலுள்ளதை அரசு உணர்ந்து கொண்டது. அதன்பின் தனக்கும் அப்பீரங்கிகளைக் கொள்வனவு செய்தது. பின் ஓயாத அலைகள் -3 நடவடிக்கையின் போது தனியான ஆட்லறித் தாக்குதல்கள் மூலமே சில படைத்தளங்களை, கட்டளைப்பீடங்களைச் சிதறடித்தனர் புலிகள். இந்நடவடிக்கையில் கனகராயன்குளப் படைமுகாம் மீதான ஆட்லறித் தாக்குதல் மிகமுக்கியமானது. ஆட்லறித் தாக்குதலில் மட்டுமே கட்டளைப்பீடம் முடக்கப்பட்டதுடன், ஆயுதக்களஞ்சியம் வெடித்துச் சிதறியது, நூற்றுக்குமதிகமான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பின் யாழ்ப்பாணத்தில் பலமுகாம்கள் புலிகளின் துல்லியமான எறிகணைத் தாக்குதலுக்கு உள்ளானது. தென்மராட்சியில் ஓர் ஆயுதக்களஞ்சியம் அழிக்கப்பட்டதுடன் 40 குழல்களைக் கொண்ட பல்குழல் பீரங்கியொன்றும் அழிக்கப்பட்டது. யுத்தத்தில் எதிரியின் ஆட்லறிப் படைத்தளங்களை புலிகள் தமது ஆட்லறிகள்மூலம் செயற்பட விடாமல் செய்திருந்தனர்.

அதைவிட பலாலி, காங்கேசன்துறைப் படைத்தளங்கள் மீதும் புலிகள் தமது ஆட்லறித் தாக்குதல்களை நடத்தினார்கள். வினியோகத்தையும் போக்குவரத்தையும் ஓரளவாவது கட்டுப்படுத்தும் வல்லமையோடு அவர்களின் பீரங்கிப் படையணியும் அதன் துல்லியமும் இருக்கிறது. இறுதியாக நடந்த பெரிய சமாரான 'தீச்சுவாலை' முறியடிப்பில்தான் புலிகளின் பீரங்கிப் பலம் முழுமையாக எதிரிக்குத் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது புலிகளுக்கு 'மட்டுப்படுத்தப்பட்ட எதிர்த்தாக்குதல்' என்ற பெயரில் ஒரு சந்தர்ப்பம் கிடைக்குமாக இருந்தால் அவர்களின் செறிவான எறிகணை வீச்சாக அது இருக்கக்கூடிய ஏதுநிலைகள் உள்ளன. புலிகளின் ஓடுபாதை தாக்கப்படுவதற்கு நேரடி எதிர்வினையாக பலாலி ஓடுபாதை தாக்கப்படலாம் என்று கருதினாலும், பலாலி ஓடுபாதை பொதுமக்களாலும் பயன்படுத்தப்படுவது புலிகளுக்கு நெருக்கடியே. எனவே அதைவிட வேறு நிலைகள்மீதுதான் புலிகளின் கவனமிருக்கும்.

நல்ல ஆய்வு.

Post a Comment